» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொங்கல் திருநாளை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் : எஸ்பி சிலம்பரசன் தகவல்!

வியாழன் 15, ஜனவரி 2026 3:53:59 PM (IST)

பொங்கல் திருநாளை முன்னிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் திருநாள் மற்றும் காணும் பொங்கலை முன்னிட்டு கடற்கரை, பூங்கா மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நை. சிலம்பரசன் உத்தரவின்படி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து கிராம பகுதிகளிலும் திருவிழா நாட்களை முன்னிட்டு நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைப்பது மற்றும் பைக் ரேஸ் செல்லுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், பைக்கில் சாகசம் செய்தல் போன்ற மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறுபவர்கள் மீதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory