» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பொங்கல் விழா
செவ்வாய் 13, ஜனவரி 2026 3:33:25 PM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பள்ளி விளையாட்டு மைதானத்தின் நடுவே சுற்றிலும் கரும்புகள் கட்டப்பட்டு அடுப்புகள் வைத்து அதில் வெண்கலப் பானையில் பள்ளி ஆசிரியர்கள் பொங்கல் வைத்தனர் மாணவ, மாணவியர்கள் வேஷ்டி, சட்டை, பாவாடை தாவணியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் உற்சாகமாக கலந்து கொண்டு பொங்கல் பொங்கி வரும் பொழுது ஒரே சமயத்தில் பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்

மாணவ மாணவிகள் நம்முடைய பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விழா நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பயிற்சி ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கரும்பு, சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 11, மார்ச் 2026 12:42:02 PM (IST)

தேர்தல் நடைமுறைகள்: வ.உ.சிதம்பரம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு முகாம்!
புதன் 11, மார்ச் 2026 11:32:32 AM (IST)

லாரி ஷெட் உரிமையாளர் கொலை:வாலிபர் கைது!
புதன் 11, மார்ச் 2026 11:06:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 22ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
புதன் 11, மார்ச் 2026 10:44:53 AM (IST)

தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!
புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை? உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:52:01 AM (IST)

SureshJan 15, 2026 - 11:43:58 PM | Posted IP 162.1*****