» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக அரசைக் கண்டித்து ஜன.20 காலவரையற்ற வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர்கள் முடிவு
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:01:54 AM (IST)
தமிழக அரசைக் கண்டித்து ஜன. 20ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக சார்பில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணி ஓய்வின்போது பணிக்கொடை, காலி பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், சத்துணவு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அரசு இதுவரை எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லையாம்.
இந்நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்டம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு மாவட்டத் தலைவர் பெருமாள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலர் ஜெயபாக்கியம், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் முருகன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.
அதில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; இல்லையென்றால் திட்டமிட்டபடி வரும் ஜன. 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களை மூடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 11, மார்ச் 2026 12:42:02 PM (IST)

தேர்தல் நடைமுறைகள்: வ.உ.சிதம்பரம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு முகாம்!
புதன் 11, மார்ச் 2026 11:32:32 AM (IST)

லாரி ஷெட் உரிமையாளர் கொலை:வாலிபர் கைது!
புதன் 11, மார்ச் 2026 11:06:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 22ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
புதன் 11, மார்ச் 2026 10:44:53 AM (IST)

தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!
புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை? உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:52:01 AM (IST)









முட்டாள்Jan 13, 2026 - 04:28:02 PM | Posted IP 172.7*****