» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனமழையால் வீடுகளுக்கு புகுந்த தண்ணீர் - பொருட்கள் சேதம் - தூத்துக்குடியில் மக்கள் அவதி!

வியாழன் 16, அக்டோபர் 2025 10:22:34 AM (IST)



தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். 

தூத்துக்குடியில் இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளான பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பெரைரா தெரு, சின்ன கடை தெரு மத்திய பாகம் காவல் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.

சந்தை ரோட்டில் உள்ள எஸ்பிஜி கோவில் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த மின் சாதன பொருட்கள் அனைத்தும் சேதமாகின. இந்த தெருவில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால். அங்கே தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்த தெரு முழுவதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேபால தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்தது.


தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய் மேம்படுத்துவதில் அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தினசரி பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி பல்வேறு நடவடிக்கையில் எடுத்தாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததை ஒரு நாள் மழைக்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் முதல் முள்ளக்காடு வரை வடிகால் அமைக்கப்படாததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக சென்னை, கோவை பெங்களூரு மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில இருந்து வரக்கூடிய பஸ்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து உள்ளனர்.


மக்கள் கருத்து

முட்டாள்Oct 17, 2025 - 02:09:43 PM | Posted IP 104.2*****

மக்களே .. ஸ்மார்ட் சிட்டி ரொம்ப ரொம்ப சூப்பர் ஆ அமைத்தார்கள் பார்த்தீங்களா.

கந்தசாமிOct 16, 2025 - 01:42:08 PM | Posted IP 162.1*****

மேயர் என்னமோ கிழித்தாக சொன்னான் அது எல்லாம் பொய் என்று மழை காட்டி விட்டது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory