» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக - பாஜக கூட்டணியைப் பார்த்து திமுக கதிகலங்கி போச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:17:29 AM (IST)

அதிமுக, பாஜக கூட்டணியைப் பார்த்து திமுக கூடாரமே கதிகலங்கி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்திற்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் போடுசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என். கே.பெருமாள், சின்னப்பன், மோகன் உட்பட கட்சி நிர்வாகிகள் கொண்டனர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ கட்சியினரிடம் பேசுகையில், "தற்போது தமிழக மக்களுக்காக அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருப்பதைக் கண்டு திமுக கூடாரமே கதிகலங்கி இருக்கிறது. அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதனை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் செயல்படுத்துவோம்.
தமிழகத்தில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகளவில் அதிகரித்து சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து காணப்படுகிறது என பேசினார். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி பூத் கமிட்டியில் இளைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் பிரிவில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறியதோடு கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கினார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு ஸ்டாலினின் மாடல் அரசின் வெற்று விளம்பர பட்ஜெட் எனும் தலைப்பில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் அதிமுக முன்னால் சேர்மன் தனஞ்செயன், முனியசக்தி ராமச்சந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், தனவதி, எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், அம்மா பேரவை செயலாளர் வரதராஜ பெருமாள், குட் லக் செல்வராஜ், மோகன், அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி ஆனந்த், சுரேஷ்,கார்த்தி, சரவணன், நிர்மல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரகாசபுரம் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை பவனி : திரளானோர் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 8:18:01 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா
சனி 26, ஏப்ரல் 2025 7:48:21 PM (IST)

இடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!
சனி 26, ஏப்ரல் 2025 7:41:23 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வரி வசூல் மையம் நாளை வழக்கம் போல் செயல்படும் : ஆணையர் தகவல்
சனி 26, ஏப்ரல் 2025 7:35:16 PM (IST)

தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனை தடை: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானம்!
சனி 26, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

பகலில் குடை, தொப்பி இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 26, ஏப்ரல் 2025 3:50:47 PM (IST)
