» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா

சனி 26, ஏப்ரல் 2025 7:48:21 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகாரம்  செய்தனர். 

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில்  ராகு கேது பெயர்ச்சி விழா இன்று மாலை 4.45 மணிக்கு நடந்தது. ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும் கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர். 

இதை முன்னிட்டு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாரணை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து காெண்டனர். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம், தனுசு ராசியைச் சேர்ந்த பக்தர்கள் தேங்காய் பழம் எள்ளு தானமாக கொடுத்து பரிகாரம் செய்தனர். பின்னர் சனி பகவானுக்கு எள்ளு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர். பூஜைகளை சண்முகம் பட்டர் நடத்தினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory