» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!

வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார்.

அதன்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 197947 வாக்காளர்கள், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்  236461 வாக்காளர்கள், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 222631 வாக்காளர்கள், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 207054 வாக்காளர்கள், ஓட்டப்பிடாரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் 232536 வாக்காளர்கள், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 231529 வாக்காளர்கள்  என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர் . 

தூத்துக்குடி மாவட்டத்தில் 649224 ஆண்கள், 678752 பெண்கள், 182 இதரர் என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 162527 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.

இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory