» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை: 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:37:45 AM (IST)
சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சுடலை முத்து (25). கூலி தொழிலாளி. இவர் இன்று காலை 10:30 மணி அளவில் அங்குள்ள ஒரு சினிமா தியேட்டர் முன்பு நின்று நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2பேர் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுடலைமுத்து நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள பாரில் மது குடித்துக் கொண்டிருந்த போது, எதிரே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த சுந்தர் மற்றும் அவரது நண்பர் ஜெகதீஷ் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பாரில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி விட்டனர்.
இந்த முன் விரோதம் காரணமாக சுந்தர் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சுடலைமுத்துவை கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளத்தில் பட்டபகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
உறவினர்கள் சாலை மறியல்
இதனிடையே சுடலைமுத்துவின் உறவினர்கள், அவரது உடலை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை அங்கிருந்து எடுக்க கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் (பொறுப்பு) டி.எஸ்.பி. ராமச்சந்திரன், திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ராமச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட சுடலைமுத்துவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










