» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!
சனி 26, ஏப்ரல் 2025 7:41:23 PM (IST)
எட்டையாபுரம் அருகே இடி மின்னல் தாக்கியதில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை எட்டையாபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் எட்டையாபுரம் அருகே உள்ள வெம்பூர் ராமசாமி புரத்தை சேர்ந்ததுரை (52) என்பவர் காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்க சென்றார்.
பின்னர் நேற்று இரவு ஆடுகள் மட்டும் வீடுகளுக்கு திரும்பி வந்தது. துரை வரவில்லை இதனால் அவரது குடும்பத்தினர்கள் அவரை இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் தேடினார்கள் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று மதியம் துரை அங்குள்ள கண்மாய் அருகே உடல் முழுவதும் கரிய நிலையில் பிணமாக கடந்தார்.
இதனால் இவர் மீது மின்னல் தாக்கியதில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குசென்று இவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










