» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனை தடை: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானம்!

சனி 26, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)



தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியது: "தென்மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்த நிலையில், தீப்பெட்டி தொழில் ஏழை பெண் தொழிளார்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தொழிலாக உள்ளது. அந்த தொழிலுக்கு சிகரெட் லைட்டர் விற்பனை பெரும் சவாலாக உள்ளது.

தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளித்ததின் பேரில், முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் உதிரி பாகங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. முற்றிலுமாக தடை செய்யப்படவில்லை. அந்தமான் அரசு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் லைட்டர் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. அதுபோல் சுற்றுச்சூழல் துறை சார்பில் தமிழகத்தில் லைட்டரை தடை செய்ய வேண்டும்,” என்று அவர் பேசினார்.

இதற்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியது:"தென் மாவட்டங்களில் கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி தொழில் பிரதான தொழிலாக ரூ.20-க்கு கீழ் லைட்டர் விற்கப்படுவதால் பெண் தொழிலாளர்கள் உள்பட, தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. லைட்டர் விற்பனையால் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு அறியும்.

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிகரெட் லைட்டர்களும், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடியவை தான். இதன் கீழ் லைட்டர் விற்பனைக்கு தடை செய்வது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை, அரசு பரிசீலனையில் உள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சர் பதில் அளித்தார்.


மக்கள் கருத்து

இதுApr 26, 2025 - 09:04:20 PM | Posted IP 162.1*****

முட்டாள்தனமானது , அதுக்கு பேசாமல் GAS சிலிண்டர் எ தடை பண்ணவேண்டியது தானே, ஒவ்வொரு வீட்டிற்கு விறகு பயன்படுத்தினால் தொழிலாளர்களுக்கு பிரச்னை வராது அப்படித்தானே. போங்கடா சாராய குரூப் அரசியல்வாதிகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory