» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் : பொதுமக்கள் அவதி!!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:46:46 PM (IST)



விளாத்திகுளம் அருகே சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர் 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூதலாபுரம் கிராமத்திலிருந்து சேர்வைக்காரன்பட்டி சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் வனம் போல் வளர்ந்துள்ளது. இந்தசாலை வழியாகத்தான் புது சின்னையாபுரம், பி.ஜெகவீர புரம், கந்தசாமிபுரம், சேர்வைக்காரன்பட்டி, சங்கரப்ப நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு தினந்தோறும் தனியார் கல்லூரி வாகனங்கள், பள்ளி வாகனங்கள், தொழிலாளர் வாகனங்கள் சென்று வருகின்றது.

இந்த சாலையின் இருபுறமும் அதிக சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அதிகம் பயணிக்கக்கூடிய வாகனங்கள் எதிரெதிரே ஒன்றுடன் ஒன்று விலக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. 

அதேபோல் சங்கரநாயக்கன்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இப்பகுதி மக்கள் வருகின்ற வரும் 7ஆம் தேதி திங்கள்கிழமை காலை புதூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory