» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பள்ளி அருகே குப்பைகள் குவிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:39:20 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி அருகே சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி நியூ காலனி, தாமோதர நகர் பகுதியில் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் 10 தினங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் வெட்டப்பட்ட சவுக்கு மரக் கழிவுகளை சாலையோரம் கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மேலும், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வருபவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை!
புதன் 9, ஏப்ரல் 2025 8:36:13 PM (IST)

நாசரேத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
புதன் 9, ஏப்ரல் 2025 8:27:29 PM (IST)

வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15வரை அவகாசம் : ஆட்சியர் தகவல்!
புதன் 9, ஏப்ரல் 2025 8:12:56 PM (IST)

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தொல்லியல் அகழாய்வு முறைகள் பயிற்சிப் பட்டறை
புதன் 9, ஏப்ரல் 2025 8:08:03 PM (IST)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி கணினி துறையில் பிரிவு உபசாரவிழா!
புதன் 9, ஏப்ரல் 2025 5:20:27 PM (IST)

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு
புதன் 9, ஏப்ரல் 2025 4:51:32 PM (IST)
