» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏப்.9ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:16:59 AM (IST)
தூத்துக்குடியில் வருகிற 9ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்; 09.04.2025 அன்று முற்பகல் 11.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்திடலாம்.
இந்நேர்வில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணவும் பொதுமக்கள் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த அரசு டவுன் பேருந்து : தூத்துக்குடி அருகே பரபரப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:05:20 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 7:59:17 PM (IST)

இன்ஸ்டாகிராமில் மோசடி: ரூ.3 லட்சம் பணம் மீட்பு - உரியவரிடம் எஸ்பி ஒப்படைத்தார்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:55:02 PM (IST)

மண்வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சாவு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:52:41 PM (IST)

காவல்துறை சார்பில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:38:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரம்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:28:22 PM (IST)
