» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 2பேர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:09:59 PM (IST)
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மறவர் காலனி சுடுகாடு அருகே கருப்பசாமி என்பவர் வீட்டில் கடத்தலுக்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வந்த தகவலை தொடர்ந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ரேஷன் அரிசியை வாகனத்தில் ஏற்றி கொண்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்த போது கருப்பசாமி என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரேஷன் அரிசி கடத்திக் கொண்டிருந்த புவனேஸ்வரன், செல்லத்துரை இருவரையும் கைது செய்த போலீசார் 2 டன்ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர், மற்றும் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு தூத்துக்குடி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










