» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இன்ஸ்டாகிராமில் மோசடி: ரூ.3 லட்சம் பணம் மீட்பு - உரியவரிடம் எஸ்பி ஒப்படைத்தார்!

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:55:02 PM (IST)

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக செலுத்தப்பட்டு, மோசடி செய்யப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை மீட்டு  அதன் உரிமையாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக வந்த விளம்பரத்தை நம்பி அந்த பெண் மேற்படி விளம்பர நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூபாய் 3 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார்.

பின்னர் மருத்துவ உபகரணங்களை அனுப்பாமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மேற்படி பெண் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டர்.

இதில், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பர நிறுவனத்தினரை கண்டறிந்து அவரது வங்கி கணக்கை முடக்கம் செய்து, சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட  ரூபாய் 3 லட்சம் பணத்தை திரும்ப பெறப்பட்டு மீட்கப்பட்டது. மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி மீட்கப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மேற்படி பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory