» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 7:59:17 PM (IST)



ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதால் அவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்று முக்கியமான தீர்ப்பினை அளித்துள்ளது.

தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கின் முன்பு,மாவட்டக் கழக செயலாளர்,  அமைச்சர்  கீதாஜீவன்  அறிவுறுத்தலின்படி, மாநகர திமுக செயலாளர்  ஆனந்தசேகரன்  தலைமையில் திமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன், பிரமிளா, பகுதிச் செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் முக்கையா, பாலு, பாலன், கருப்பசாமி, சாமிநாதன், கங்கா ராஜேஷ், செல்வராஜ், சுரேஷ் குமார், பொன்னுச்சாமி, சுரேஷ் மகாராஜன், சுரேஷ், சதீஷ், மாமன்ற உறுப்பினர்கள் ஜான்சி ராணி, தெய்வேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory