» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா செடி வளர்ப்பு: வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:26:20 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்ட சம்பவத்தில் வீட்டு உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் ஆவுடையார்புரம் பகுதி அமைந்து உள்ளது. அதன் பின்னால் உள்ள ஒரு வீட்டில் பல மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு இருந்தன. அதன் நடுவே சுமார் 8 அடி உயர கஞ்சா செடி செழித்து வளர்ந்து நின்றது. இதனை அங்கு சென்ற சிலர் பார்த்து உள்ளனர். அந்த செடி கஞ்சா செடி போன்று இருப்பதாக, மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
அதன்பேரில் மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அந்த செடியை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த செடி கஞ்சா செடி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா செடியை வேரோடு பிடுங்கி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வீட்டில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் அன்புராஜ் என்பவர் மீது மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:27:31 PM (IST)

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயில்கள் இயக்க நடவடிக்கை: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:41:02 PM (IST)

பெட்ரோல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:32:16 PM (IST)

கிணற்றில் தவறி விழுந்து வாட்ச்மேன் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:51:35 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: சிறுவன் காயம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:35:31 PM (IST)

ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் : வாலிபர் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:33:11 PM (IST)
