» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயில்கள் இயக்க நடவடிக்கை: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:41:02 PM (IST)
தூத்துக்குடி -சென்னை சிறப்பு ரயில்கள் மற்றும் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு பயணிகள் நலச் சங்கம் மாவட்ட செயலாளர் மா. பிரமநாயகம்,அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி சென்னை இடையே கொரோனா காலத்திற்கு முன்பு குருவாயூர் சென்னை ரயிலுக்கு தூத்துக்குடியில் இருந்து லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. தற்போது அது இயக்கப்படாமல் உள்ளது. தூத்துக்குடி சென்னை முத்து நகர் ரயில் எப்போதும் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக காணப்படுகிறது.
இதற்காக தங்கள் நிர்வாகம் அவ்வப்போது ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி இணைக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலை சரி செய்கிறீர்கள். ஆனால் அதையும் தாண்டி காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. கோடைகாலத்தில் இதை சரி செய்யும் வகையாக தூத்துக்குடி-சென்னை இடையே தினசரி பகல் நேர ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் வாரத்தில் இரண்டு நாட்கள் (வியாழன், சனி) இயக்கப்படுகிறது.
இதை கூடுதலாக, தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
premApr 11, 2025 - 09:04:31 AM | Posted IP 172.7*****
thoothukudi needs ,deserves more trains. At least one day train to connect chennai. Mettupayam -tuticroin train has to run daily. doubling also over , in madurai division thoohukudi gives more revenue.madurai division should foucs passenger needs also.vande bharat day train comes also good
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











அந்தோணிசாமிApr 11, 2025 - 09:18:45 AM | Posted IP 162.1*****