» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலைய 3-வது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:28:15 AM (IST)
தீவிபத்தில் சேதம் அடைந்த தூத்துக்குடி அனல்மின் நிலைய 3-வது யூனிட்டில் மின்உற்பத்தி தொடங்கியது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வந்தன. கடந்த மாதம் 15-ந் தேதி இந்த அனல்மின் நிலையத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 18 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதன் காரணமாக அனல்மின் நிலையத்தில் உள்ள 1, 2-வது எந்திரங்கள் பெரிதும் சேதம் அடைந்தன. 3-வது எந்திரத்திலும் லேசான பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோடை காலம் என்பதால் உடனடியாக மின்சார உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து குறைவான சேதமடைந்த 3-வது எந்திரம் சீரமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு சுமார் 2½ வாரங்களுக்கு பிறகு நேற்று காலை முதல் 3-வது மின்உற்பத்தி எந்திரத்தில் மீண்டும் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது. இதில் படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்தில் 3, 4, 5 ஆகிய எந்திரங்கள் மூலம் சுமார் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1, 2-வது எந்திரங்கள் சேதமடைந்ததால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரங்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை!
புதன் 9, ஏப்ரல் 2025 8:36:13 PM (IST)

நாசரேத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
புதன் 9, ஏப்ரல் 2025 8:27:29 PM (IST)

வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15வரை அவகாசம் : ஆட்சியர் தகவல்!
புதன் 9, ஏப்ரல் 2025 8:12:56 PM (IST)

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தொல்லியல் அகழாய்வு முறைகள் பயிற்சிப் பட்டறை
புதன் 9, ஏப்ரல் 2025 8:08:03 PM (IST)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி கணினி துறையில் பிரிவு உபசாரவிழா!
புதன் 9, ஏப்ரல் 2025 5:20:27 PM (IST)

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு
புதன் 9, ஏப்ரல் 2025 4:51:32 PM (IST)
