» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிருஷ்ணராஜபுரம் பகுதியில் ரவுண்டானா: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:49:35 AM (IST)



தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியிலுள்ள சந்திப்பில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் மாநகர மக்கள் மண்டல முகாமில் ரவுண்டானா அமைத்துத் தருமாறு மக்கள் அளித்த கோரிக்கையினை தொடர்ந்து அந்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ரவுண்டானா அமைய இருப்பதால் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார். ஆய்வின் போது திமுக பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

ஆ ஆ ஆ ஆ ஆ ஆமாApr 5, 2025 - 08:21:07 PM | Posted IP 104.2*****

எல்லாத்தையும் உருப்படியாக செய்யமாட்டாங்க , சிமெண்ட் சாலைகள் மோசமா இருக்கு அதுலயும் கவனிக்க மாட்டானுங்க

Alagu muthu pandi SApr 4, 2025 - 04:06:38 PM | Posted IP 104.2*****

பிரையண்ட்நகருக்கும் அண்ணாநகருக்கும் நேரடியாக போவதை தடுத்து. நெல்லை செல்லபாண்டியன் பாலத்திற்கு கீழ் உள்ள ரவுண்டானா போல பெரிய ரவுண்டானா அமைந்தால் போதும் பாலம் இல்லாமல் நாம் தமிழர் வளாகம் இடிக்கபடாமல் அதை சுற்றியே சிறந்த போக்குவரத்து அமைக்கமுடியும். மேயர் கவனித்தால் மகிழ்ச்சி

MmmmApr 4, 2025 - 01:35:43 PM | Posted IP 172.7*****

Vvd சிக்னல் பகுதியில் உள்ள நெரிசலை முதல்ல பாருங்க..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors






CSC Computer Education




Thoothukudi Business Directory