» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வின்பாஸ்ட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு என வதந்தி : இளைஞர்கள் ஏமாற்றம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:37:13 AM (IST)

தூத்துக்குடி வின்பாஸ்ட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு என்று வெளியான வதந்தியால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், 408 ஏக்கர் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜூன் மாதத்தில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வின்பாஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து தூத்துக்குடி மட்டுமின்றி சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று குவிந்தனர். ஆனால் அங்கு ஆள் எடுக்கும் பணி எதுவும் நடைவெறவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இது வதந்தி என்று தெரியவந்துள்ளதால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிருஷ்ணராஜபுரம் பகுதியில் ரவுண்டானா: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:49:35 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி அருகே குப்பைகள் குவிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:39:20 AM (IST)

தூத்துக்குடியில் 3வது நாளாக வழக்கறிஞர்கள் ஸ்ட்ரைக் : நீதிமன்ற பணிகள் பாதிப்பு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:27:30 AM (IST)

ஏப்.9ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:16:59 AM (IST)

நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்து: ஐ.டி.ஐ. மாணவர் பலி!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:31:32 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய 3-வது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:28:15 AM (IST)

அப்போApr 2, 2025 - 09:57:50 AM | Posted IP 172.7*****