» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய பூங்கா, விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் : மேயர் தகவல்

புதன் 19, மார்ச் 2025 3:17:23 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் எதிர்கால தலைமுறையினர் நலன் கருதி விளையாட்டு மைதானம், பூங்காக்கள் அமைக்கப்படும் என மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். ஆணையர் மதுபாலன் மண்டலத்த லைவர் கலைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனர். முகாமை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் "பிப்ரவாி மாதத்திற்குள் அனைத்து சாலைகளும் சாி செய்து தரப்படும். இப்பகுதியில் முத்துநகர் கடற்கரை, ரோச் பூங்கா உள்ளன. அதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் பொருட்டாக நடைபயிற்சி உள்ளிட்டவைகளை பொதுமக்கள் மேற்கொண்டு மகிழ்ச்சியாக பொழுது போக்கு நிகழ்வுகளை களித்து வருகின்றன. 

பல இடங்கள் ஆணையா் பெயாிலும் சில இடங்கள் ஆட்சித்தலைவர் பெயாிலும் அரசு இடங்கள் இருப்பதுண்டு பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காலிஇடத்தை கலெக்டர் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஓப்படைத்து கடிதம் கொடுத்துள்ளாா். அதனடிப்படையில் அந்த இடத்தில் எதிர்கால தலைமுறையினருக்கேற்ப கோடைகாலத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கப்படும். 

போக்குவரத்து நொிசலை குறைப்பதற்கு ஏதுவாக மக்கள் பயன்பாட்டிற்கு வழித்தடமும் அமைத்து கொடுக்கப்படும் மாநகாின் மையப்பகுதியில் ஆன்மீக தலம் நிறைந்த பகுதியில் உள்ள தெப்பக்குளம் மிகவும் பழமையானது கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் அங்கு வந்து செல்வதுண்டு அதை மேலும் அழகு கூட்டும் வகையில் பேவர் பிளாக் பதிக்கப்பட்டு வண்ண விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. 

அதே போல் 1ம் கேட் பகுதி தேவாலயம் எதிாில் உள்ள அந்த சிறிய பூங்காவும் சற்று மேம்படுத்தப்பட்டு அதன் அருகில் மற்றொரு அரசு இடத்தில் ஓரு பூங்காவும் அமைக்கப்படவுள்ளது. மாநகராட்சியை பொறுத்தவரை 206 பூங்காக்கள் இருக்கும் வகையில் அமைய பெற்றுள்ளது. பல இடங்களில் தன்மைக்கேற்ப கட்டமைப்புகளுடன் உருவாக்கப்படுகிறது. மாவட்ட விளையாட்டு மைதானம் போன்று மாநகராட்சி பகுதிகளிலும் அதுபோன்று அமைவதற்கு உள்ள வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். 

புதிய கால்வாய்கள் தார்சாலை என எல்லா பகுதிக்கும் பாரபட்சமின்றி அமைத்து கொடுத்துள்ளோம் முழுமையாக மே மாதத்தில் அனைத்தும் நிறைவு பெறும். மக்களின் மகிழ்ச்சிதான் எங்களுக்கு பெருமை அளிக்க கூடியதாக அமையும் அந்த வகையில் தான் நாங்களும் பணியாற்றி வருகிறோம். என்று பேசினாா். பின்னா் பிறப்பு இறப்பு பெயர் மாற்றம் முகவாிமாற்றம் என 5 பேருக்கு உடனடியாக சான்றுகளை வழங்கினாா்.

பொதுமக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கிழக்கு மண்டலத்தில் மாநகராட்சி நிர்வாகம் மீது நம்பிக்கை வைத்து அதிக அளவில் கோாிக்கை மனு வழங்கினாா்கள் அவர்களோடு இணைந்து மாமன்ற உறுப்பினர்களும் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து கோாிக்கை மனு வழங்கினாா்கள். மதிமுக சார்பில் மகாராஜன் பொன்ராஜ் ஆகியோர் மாநகராட்சி பகுதியில் தமிழ் எழுத்துக்களுடன் பல்வேறு விளம்பர பாதாகைகள் முழுமையாக வைக்க வேண்டும். சில இடங்களில் காட்சி பொருளாக இருக்கும் விளம்பரம் இல்லாத பதாகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோாிக்கை மனு வழங்கினர்.

நிகழ்ச்சியில் இணை ஆணையர் சரவணக்குமாா், உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் ராமசந்திரன், இர்வின் ெஜபராஜ், நகா்நல அலுவலர் அரவிந்த் ஜோதி, சுகாதார ஆய்வாளர் ெநடுமாறன். இளநிலை பொறியாளர்கள் பாண்டி, அமல்ராஜ், குழாய் ஆய்வாளர் மாாியப்பன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலர்கள் தனலட்சுமி, மாியகீதா, ராமு அம்மாள், பேபி ஏஞ்சலின், சரண்யா, மகேஸ்வாி, எடின்டா, ரெக்ஸ்லின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, முன்னாள் கவுன்சிலர் மயிலாபரணம், உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory