» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி பிரிந்து சென்றதால் தகராறு: சின்ன மாமனாரை கல்லால் அடித்துக்கொன்ற வாலிபர்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:46:36 PM (IST)
தூத்துக்குடி அருகே பிரிந்து சென்ற காதல் மனைவியை குடும்பம் நடத்த வீட்டுக்கு அழைத்தபோது ஏற்பட்ட தகராறில் சின்ன மாமனாரை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் தாசன் பெர்ணன்டோ. இவரது மகன்கள் தாமஸ், மரிய ஆக்னஸ் செல்வம் (45). இவர்களில் தாமசுக்கு திருமணமாகி இசக்கித்தாய் என்ற மனைவியும், முகிலா என்ற மகளும் உள்ளனர். மரியா ஆக்னஸ் செல்வத்துக்கு திருமணமாகவில்லை. இதனால் அவர் தனது அண்ணன் தாமஸ் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.
கீழச்சய்த்தலை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (27). பெயிண்டர். இவரும், முகிலாவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வாரங்களிலேயே தம்பதி இடையே கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வேதனை அடைந்த முகிலா கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத மாரிச்செல்வம் தனது மனைவி முகிலாவின் சித்தப்பாவான மரிய ஆக்னஸ் செல்வத்தை செல்போனில் தொடர்புகொண்டு முகிலாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மாரிச்செல்வம் தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு நேரடியாக சென்றார்.அங்கிருந்த மரிய ஆக்னஸ் செல்வத்திடம் தனது மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாரிச்செல்வம் அருகில் கடந்த கல்லை எடுத்து மரிய ஆக்னஸ் செல்வத்தின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதற்குள் மாரிச்செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்யேசுதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரிய ஆக்னஸ் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், வழக்கு பதிவு செய்து மாரிச்செல்வத்தை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மணியாச்சி டிஎஸ்பி அருள் விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










