» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)
சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 10 மற்றும் 11 வயது சிறுமிகள் இருவரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சகாயம் மகன் கெவின் (38/25) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று (17.12.2025) குற்றவாளி கெவின் (38) என்பவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 13,500/- அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து தலா ரூபாய் 2 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 29 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டினமருதூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கள ஆய்வு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:30:06 PM (IST)

பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:09:24 PM (IST)

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)










