» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:09:24 PM (IST)

அமலாக்க துறையை கண்டித்தும், பிரதமர் மோடி பதவி விலக கோரியும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் தவறு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி மீதும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதும் பொய்யான குற்றச்சாட்டை பதிவு செய்து டெல்லி நீதிமன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி.
எனவே அமலாக்க துறையை கண்டித்தும், பிரதமர் மோடி பதவி விலக கோரியும், நாடு தழுவிய போராட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளீதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் ராஜன், சேகர், செந்தூர்பாண்டி, ஐசன் சில்வா, ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க மாநில அமைப்பு செயலாளர் ராஜ், மாநில செயலாளர் சுடலை, மாநகர் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி பிரீத்தி, சிறுபான்மை பிரிவு மாநகர மாவட்ட தலைவர் மைதீன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)

பட்டினமருதூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கள ஆய்வு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:30:06 PM (IST)

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)










