» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!

வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர்  விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சுரேஷ் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் மணிகண்டன், இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, முதல் நிலைக் காவலர் பழனி பால முருகன், பேச்சி ராஜா ஆகியோர் நள்ளிரவு 01.00 மணியளவில், தூத்துக்குடி துறைமுகம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த தூத்துக்குடி மட்டகடை பகுதியைச் சேர்ந்த கென்னடி மகன் சுதர்சன் (33) மற்றும் தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்த முட்டை சுரேஷ் உட்பட நான்கு நபர்கள், சுமார் 100 கிலோ கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து, அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக மற்றொரு கும்பலுக்கு கைமாற்றி விடுவதற்காக கொண்டு வந்துள்ளனர். 

அப்போது,  போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பி செல்ல முயன்றதில், சுதர்சன் என்பவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது ஸ்கூட்டர் மற்றும் 100 கிலோ கஞ்சா பிடிபட்டது. பிடிபட்ட சுதர்சன் மீது ஒரு கொலை வழக்கு, ஒரு கஞ்சா போதை பொருள் வைத்திருந்த வழக்கு மற்றும் கொலை கொலை முயற்சி வழக்குகள் உட்பட ஏழு வழக்குகள் இருப்பதாக தெரியவருகிறது. இதையடுத்து சுதர்சனை போலீசார் கைது செய்தனர். கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு கோடி ஆகும். தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory