» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை

வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டான 2025-26, 14.12.2025 அன்று 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டை இதே காலநிலையிடன் ஒப்பிடுகையில் 7 நாட்களுக்கு முன்பாகவே துறைமுகம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது. இது துறைமுகத்தின் செயல்திறன் மேம்பாட்டையும், வளர்ச்சி வேகத்தையும் பிரதிபலிக்கிறது. 

இந்த ஆண்டின் துவக்கத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் நெய்வேலி லிமிடெட் கார்ப்ரேசன் தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம் திறன் குறைவால் துறைமுகம் சுமார் 2.4 மில்லியன் டன் சரக்குகளை இழந்துள்ளது. இந்த நிலையிலும் துறைமுகம் இந்த சாதனை படைத்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.

சரக்கு பெட்டகங்களை பொறுத்தவரையில், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்த நிதியாண்டு 14.12.2025 வரை 5,98,445 டியுஇ சரக்குப்பெட்டகங்களை கையாண்டு கடந்த நிதியாண்டு இதே நாளில் கையாண்ட அளவான 5,51,186 டியுஇ சரக்கு பெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு 8.57% வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முக்கியமாக சுண்ணாம்புக் கல், உப்பு, ராக் பாஸ்பேட், கந்தக அமிலம், சமையல் எண்ணெய், திரவ அம்மோனியா மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவை கையாளப்பட்டதன் மூலம் இச்சாதனை நிகழ்ந்துள்ளது. 

வ.உ.சிதம்பரனார் துறைமுகத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விரிவடையும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை காரணமாக கையாளப்படும் சரக்கின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். 

இதன் மூலம் துறைமுகத்தின் போக்குவரத்து மற்றும் வர்த்தக வாய்ப்புகள் மேன்மேலும் வளரும். இந்த முக்கியமான சாதனையில் தொடர்ந்து ஆதரவு மற்றும் பங்களிப்பினை அளித்த அனைத்து துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், துறைமுக தொழிற்சங்கங்கள், சரக்கு பெட்டகங்க முனையங்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.


மக்கள் கருத்து

யாருDec 18, 2025 - 11:20:37 AM | Posted IP 172.7*****

எத்தனை சாதனைகள் செய்தாலும் , சாமானியனுக்கு பிரயோஜனம் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory