» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஷிப்பிங் நிறுவன ஊழியர் மரணம்: துறைமுகத்தில் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:26:07 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் மரைன் ஷிப்பிங் நிறுவன ஊழியர் மரணத்திற்கு இழப்பீடு வழங்க கோரி குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்  பழைய துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி போல்டன்புரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சந்தனராஜ், இவர் பீச் ரோட்டில் அமைந்துள்ள ஹரி அண்ட் கோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் தஸ்நேவிஸ் மரைன் ஷிப்பிங் என்ற நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக இவர் நிறுவனம் சார்பில் பழைய துறைமுகத்தில் சரக்கு கொண்டு செல்லும் சிறிய ரக கப்பல்களில் பழுது பார்க்கும் பணியை மேற்பார்வை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி இரவு பழைய துறைமுகத்தில் ஒரு பார்ச்சில் (Barchi) வெல்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும்போது அந்த பணியை பார்வையயிடுவதற்காக சந்தனராஜ் சென்றுள்ளார். ஆனால் அவர் நின்று கொண்டிருக்கும் போது திடீரென மாயமாகி, கடலில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே சந்தனராஜ் பணியாற்றிய நிறுவனம் சார்பில் அவருக்கு உரிய பாதுகாப்பு  உபகரணங்கள் அளிக்காததே அவரது மரணத்திற்கு காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், துறைமுக சபை நிர்வாகம் மற்றும் அவர் பணிபுரிந்து நிறுவனம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனத் தெரிகிறது. 

இந்த நிலையில், சந்தன ராஜின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்று பழைய துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகம், துறைமுக ஆணையம் தலையிட்டு சந்தனராஜ் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு துறைமுகத்தில் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் விடுத்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory