» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: வியாபாரிகளிடம் எஸ்.பி., அறிவுறுத்தல்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 7:58:30 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் நல்லுறவை ஏற்படுத்தி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் வியாபாரிகளின் நிறை குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார்.
மேலும் சிசிடிவி கேமராவை அனைத்து கடைகளிலும் முக்கிய இடங்களிலும் அதிகம் நிறுவினால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் குற்ற செயலில் ஈடுபவர்களை எளிதில் கண்டறிய உதவும் எனவும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அலுவலக தலைமை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் வியாபாரிகள் சங்கத் தலைவர்களும், பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










