» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திடீர் மாற்றம் : புதிய ஆணையராக பிரியங்கா மாற்றம்

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:34:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பானோத் ம்ருகேந்தர் லால் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசுத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரியங்கா ஐஏஎஸ்  நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் 60 நாட்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழக செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் (ஐஏஎஸ்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சமூகநல இயக்குநரக கூடுதல் இயக்குநராக ஷரண்யா நியமிக்கப்பட்டுள்ளார். திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக சஜ்ஜன்சிங் ரா சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மாநில தேர்தல் ஆணைய செயலாளராக ஸ்ரீவெங்கடபிரியா நியமிக்கப்பட்டுள்ளார். பொது மற்றும் மறுவாழ்வு துறை கூடுதல் செயலாளராக பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து

Prem KumarAug 29, 2025 - 08:53:09 AM | Posted IP 162.1*****

May be straight forward stop corruption in corporation

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory