» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்ரோலில் எத்தனால் கூடுதலாக கலப்பதால் வாகனங்கள் பழுது: ஆய்வு நடத்த கோரிக்கை!

புதன் 19, மார்ச் 2025 3:06:01 PM (IST)

தூத்துக்குடியில் பெட்ரோல் பங்க்குகளில் எத்தனால் கூடுதலாக கலப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "பெட்ரோலில் எத்தனால் அளவு 20% சேர்த்து எத்தனால் கல்பபதால் வாகங்களில் இன்சின் ஆயுள் காலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இஞ்சின் உட்பகுதி வேகமாக தேய்ந்து கார்பன் படியும் நிலை ஏற்படுகிறது. தற்போதுநிலமை மேலும் மோசமாகியுள்ளது. வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கு போதே இன் சின் நின்று (OFF) விடுகிறது. 

பெட்ரோலில் பெட்ரோல் பங்க்குகளில் கலப்படம் செய்யப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தும் சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெட்ரோல் பங்க்குகளில் பொதுமக்கள் தகராறு செய்யும் நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதலாக எத்தனால் கலப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

naan thaanMar 19, 2025 - 04:41:08 PM | Posted IP 172.7*****

காசு போட்டு வண்டி வாங்குனவனுக்கு தானே கஷ்டம் தெரியும் ... பெட்ரோல் ல கலப்படம் பண்ணுறவன்னுக்கு பொச்சா தெரியும்... எனக்கும் அதே பிரச்சனை தான்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory