» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியுடன் முள்ளக்காடு ஊராட்சியை இணைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 21, ஜனவரி 2025 8:48:26 PM (IST)



முள்ளக்காடு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சியுடன் முள்ளக்காடு ஊராட்சியை இணைப்பதை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி முன்னாள் தலைவர் கோபிநாத் நிர்மல் கூறுகையில், "தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள முள்ளக்காடு ஊராட்சியில் உப்பளம் விவசாயம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கே மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவரின் கீழ் சிறப்பான நிர்வாகம் நடைபெற்று, சாலை குடிநீர் பெருவிளக்கு வடிகால் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே ஊராட்சி மக்களின் விருப்பத்திற்கு மாறாக மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவுக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் உடனடியாக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை மீறி தூத்துக்குடி மாநகராட்சியுடன் முள்ளக்காடு ஊராட்சியை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம் அதனை வெளிப்படுத்தும் வகையில் இன்று ஊராட்சி அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றார். 

ஆர்ப்பாட்டத்தில் முள்ளக்காடு ஊர் கோவில் தர்மகர்த்தாக்கள் சேகர், ரகுபதி என்ற சின்னராஜ், ஊராட்சி முன்னாள் தலைவர் கோபிநாத் நிர்மல், பொட்டல் காடு ஊர் தலைவர் ஜெய கிருஷ்ணன், செயலாளர் திவாகர், பொருளாளர் முத்துராஜ், உப்பு உற்பத்தியாளர் சிவாகர், காமராஜர் இளைஞர் சங்க தலைவர் கோகுல், வக்கீல் பாஸ்கர், திமுகவைச் சேர்ந்த சில்வர் சிவா, அதிமுக செயலாளர் ஸ்ரீராம், கணேசன் கம்யூனிஸ்ட் கட்சி மகாராஜன், நாம் தமிழர் கட்சி ஆனந்த், பால்ராஜ்,முள்ளக்காடு பொட்டல்காடு ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors







Thoothukudi Business Directory