» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டிரைவர்களிடம் செல்போன், பணம் பறிப்பு: 5பேர் கைது!

புதன் 22, ஜனவரி 2025 9:01:27 AM (IST)

தூத்துக்குடியில் 2 டிரைவர்களிடம் செல்போன், பணம் பறித்த வழக்குகளில் 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் சத்தியபிரகாஷ் (29). லாரி டிரைவர். இவர் முத்தையாபுரம் திருச்செந்தூர் ரோடு டாஸ்மாக் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்த இசக்கிமுத்து (26), சூசைநகரை சேர்ந்த மகேந்திரன் (31), பொன்னாண்டி நகரை சேர்ந்த மாரிமுத்து (22) ஆகியோர் சத்தியபிரகாசிடம் மது குடிக்க பணம் கேட்டு உள்ளனர்.

ஆனால் சத்தியபிரகாஷ் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், அவரிடம் தகராறு செய்து செல்போன் மற்றும் ரூ.400 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு அந்த 3 பேரையும் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம் :  தூத்துக்குடி அருகே உள்ள சிலுக்கன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (42). டிரைவர். இவர் தட்டப்பாறை விலக்கு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த, முடிவைத்தானேந்தல் யாதவர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துமாலை (25), பார்வதிராஜா (24) ஆகிய 2 பேரும் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.1000 பணத்தை பறித்து சென்று உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory