» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு!

புதன் 22, ஜனவரி 2025 10:29:33 AM (IST)



ஓட்டப்பிடாரம் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் ஓட்ப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குகல்மேடு கிராமம் அருகில் உள்ள கல்லாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கட்டபொம்மன் அணைக்கட்டின் நிரந்தர சீரமைப்பு பணிகளையும் கக்கரம்பட்டி ஊராட்சியில்ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், கக்கரம்பட்டி ஊராட்சி குறுக்குச்சாலை பகுதியில் ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, 

கச்சேரி தளவாய்புரம் ஊராட்சியில் ரூ.126.57 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், கச்சேரி தளவாய்புரம் ஊராட்சியில் ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில்புதிதாக கட்டப்பட்டு வரும் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினையும், கச்சேரி தளவாய்புரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் வட்டம், எப்போதும்வென்றான் அணைக்கட்டு, எப்போதும்வென்றான் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவினை பார்வையிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களின் வாசிப்பு திறனை அறிந்திட செய்தித்தாள்களை கொடுத்து மாணவ, மாணவியர்கள் பிழையின்றி படித்திட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 

தொடர்ந்து, பி.துரைசாமிபுரம் ஊராட்சி பகுதியில் ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடை கட்டடம், ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டடத்தினையும் பார்வையிட்டார்.

மேலும், கீழமுடிமண் ஊராட்சியில் ரூ.16.55 இலட்சம் மற்றும் ரூ.17.55 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் இரண்டு அங்கன்வாடி கட்டிடடங்களையும், ஓட்டப்பிடாரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும்கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory