» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயற்கை அழிவு குறித்து மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்: திருமண்டல பாஸ்டேட் சேர்மன் கோரிக்கை!

புதன் 22, ஜனவரி 2025 10:13:25 AM (IST)

இயற்கை அழிவு குறித்து பொதுமக்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் திருமறையூர் பாஸ்டேட் சேர்மன் மற்றும் திருமண்லத்தின் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா குலசேகரப்பட்டிணம் பல காரணங்களுக்காக பெயர்பெற்ற இடமாக திகழுகின்றது. குலசேகரப்பட்டினம் கிராமமானது புதிய துறைமுகம் மற்றும் ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் முக்கியமான ஒரு இடம். சமீபகாலமாக, இக்கிராமத்தில் கடற்கரையில் செழித்து வளர்ந்திருக்கும் பனைமரங்களுக்கு கடல் அரிப்பினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாறிவரும் காலநிலை மாற்றத்தினாலும், உயர்ந்துவரும் புவி வெப்பத்தினாலும், பூமியானது பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றது. புவி வெப்பமயமாகுதலினால் இன்று பெருமளவு மாற்றங்கள் புவியில் நிகழ்ந்து வருகின்றது. பனிப்பாறைகள் உருகுவதினால் கடல்மட்டம் அதிகமாக உயர்ந்து வரும் அபாயம் அதிகரித்துள்ளது. குலசேகரப்பட்டினம் கடற்கரை அதற்கொரு எடுத்துக்காட்டாய் உள்ளது. 

சமீப காலமாக கடலில் ஏற்பட்டு வரும் மாற்றத்தினால் கடல்நீர் பெருமளவு கரைப்பகுதியை நெருங்கியுள்ளது. இதன் விளைவாக கடற்கரை அருகே செழித்து வளந்துள்ள பனைமரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. சுமார் ஆறு அடி ஆழத்திற்கு மணல் அரிக்கப்பட்டு பனை மரங்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது பனைமரங்கள் இருந்த கடற்கரைகள் அழிவிலிருந்து பெரிதும் காக்கப்பட்டிருந்தது. இப்பேற்பட்ட இயற்கை அரண்களாய் அமைந்திருந்த பனைமரங்கள் கடல் அரிப்பினால் சாய்ந்து கிடக்கின்றன. 

இதேநிலை நீடிக்குமென்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்குள்ளாக குலசேகரப்பட்டினம் பகுதி கடற்கரையில் இருக்கும் பனைமரங்கள் அனைத்தும் வேறோடு சாய்ந்துவிடும். பற்பலவிதமான வளர்ச்சிப்பணிகளில் தங்கள் கவனத்தை செலுத்தும் அரசு கட்டாயமாக மாறிவரும் இச்சூழலுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டிய அதிக அவசியமாக இருக்கின்றது. கற்பகத்தரு என்றழைக்கப்படும் பனைமரங்களின் அழிவு சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அரசு இதில் கவனம் கொண்டு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு கடல் அரிப்பை தடுப்பதற்கு ஆவண செய்ய வேண்டும். 



இந்த சூழல்நிலை நீடிக்குமென்றால் குலசை கடலோரங்களில் நிற்கும் அனைத்து பனை மரங்களும் அழிவது நிச்சயம். பொது மக்களும் இயற்கை அழிவு குறித்து மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை தவிர்த்து இயற்கையான பொருட்களை பெரிதும் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடாதவாறு பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை ஆகும். ஆகவே தமிழக அரசும் உடனே கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors



Thoothukudi Business Directory