» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் திடீரென மயங்கி விழுந்த நிதி நிறுவன ஊழியர் சாவு
புதன் 22, ஜனவரி 2025 8:57:42 AM (IST)
குரும்பூர் அருகே சாலையில் நிதி நிறுவன ஊழியர் பைக்குடன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டணத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (33). இவர் நாசரேத் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிதி நிறுவனம் மூலம் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இவர் தினமும் நிதி நிறுவன அலுவலகத்திற்கு காலையில் வந்து விட்டு, வெளியில் சென்று கடன்களை வசூலித்து கொண்டு மாலையில் அலுவலகம் திரும்புவது வாடிக்கை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடனை வசூலிக்க புறப்பட்டு சென்றுள்லார். குரும்பூர் அருகே மரந்தழை பகுதியில் சென்றபோது திடீரென்று மோட்டார் ைசக்கிளுடன் மயங்கி சாலையில் விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் குரும்பூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.