» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை : தந்தை கைது!
புதன் 22, ஜனவரி 2025 8:36:54 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தையை போலீசார் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தையடுத்த கீழமுடிமண் காலனி தெருவை சோ்ந்தவா் ஜெபதியன் மகன் கூலித் தொழிலாளி சாா்லஸ் (41). இவா் வீட்டில் தனியாக இருந்த தனது 14 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து சாா்லஸை கைது செய்தனா்.