» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செவிலியர் தூக்கிட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 21, ஜனவரி 2025 8:39:46 PM (IST)
பெரியதாழையில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையை சேர்ந்தவர் ஜோசப் மகள் ஷைனி, (28). இவர் நர்சிங் படித்து வெளிநாட்டில் செவிலியர்வாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு தூக்கம் வராமல் உள்ள நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இவரது நோய் மாப்பிள்ளை வீட்டாருக்கும் தெரிந்து விடும் என வருத்தத்தில் இருந்த அவர் நேற்று வீட்டில் யார் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். உடன் உறவினர்கள் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை ஜோசப் தட்டார் மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அனிதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.