» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீனவர்கள் வலையில் சிக்கிய 1½ டன் திருக்கை மீன் : ரூ.56 ஆயிரத்திற்கு ஏலம்!
செவ்வாய் 21, ஜனவரி 2025 8:33:39 PM (IST)
பெரியதாழை கடலில் 1½ டன் எடை கொண்ட கொம்பு திருக்கை மீன் மீன் வலையில் ச சிக்கியது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மீனவ கிராமத்தில் 600 க்கு மேற்பட்ட பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். நேற்று மீனவர் ஜோசப் என்பவர் பைபர் படக்கில் 5 பேர் கொண்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் கடலில் வலையில் விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒன்றரை டன் எடை கொண்ட கொம்பு திருக்கை மீன் அந்த வலையில் மாட்டியது.
உடன் மகிழ்ச்சி அடைந்த மீனவர்கள் வலையுடன் பைபர் படகில் கயிறு கட்டி அந்த மீனை கடற்கரை ஓரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அதை டிராக்டர் வண்டி மூலம் கடற்கரையில் இருந்து வெளியே கொண்டு வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு ஏலம் விடப்பட்டது. ஒன்றரை டன் எடையுள்ள கொம்பு திருக்கை மீன் 56 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்திற்கு போனது.