» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 21, ஜனவரி 2025 7:25:12 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக தாளமுத்துநகர் பாக்கியநாதன்விளை பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் மாரிமுத்து (52) என்பவரை கொலை செய்த வழக்கில் மேற்படி இறந்துபோன மாரிமுத்துவின் மருமகனான திருநெல்வேலி பாபநாசம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் காளிராஜ் (49) என்பவரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் -2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  ப்ரீத்தா  இன்று குற்றவாளியான காளிராஜ்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்கள்  தங்ககிருஷ்ணன்,  சார்லஸ் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர்  சிவன்ராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory