» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போக்குவரத்து போலீசார் சோதனை: 14 வாகனங்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்!

செவ்வாய் 21, ஜனவரி 2025 5:44:23 PM (IST)



தூத்துக்குடியில் கல்லூரி முன்பு போக்குவரத்து போலீசார் திடீர் சோதனை நடத்தி 14 இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 20 அபராதம் விதித்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ். வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் ஆங்காங்கே இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பாளை., ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி முன்பு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமையில் போக்குவரத்து காவல் துறையினர் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன சோதனையில் 14 இரு சக்கர வாகனம் பிடிபட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து

வஉசிJan 22, 2025 - 05:22:21 AM | Posted IP 162.1*****

கல்லூரி மாணவர்கள் உயர் ரக பைக்குகளில் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேதான் ஓட்டி வருகின்றனர் பெரும்பாலும்...அதுவும் அந்த உர்...உர்ன்னு சவுண்டு வேற..படிக்க வருதுகளா...இல்ல ஊர் மேய வருதுகளா

JosephJan 21, 2025 - 10:09:19 PM | Posted IP 162.1*****

மக்களுக்கு அச்சுறுத்தல் செய்யும் வகையில் வேகமாக வாகனத்தை இயக்கம் இவர்களை தடை செய்தால்தான் தொடர்ந்து இப்படிப்பட்ட நிலை ஏற்படாது வரவேற்க வேண்டிய விஷயம்

இம்மானுவேல் குணசிங், தூத்துக்குடி மாவட்ட நிருபர்.Jan 21, 2025 - 09:57:59 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் அதிக படியான இரு சக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் சர்வசாதாரணமாக உலாவி வருகிறது இது யார் மெத்தன பொங்கு என்று கூற முடியவில்லை. காவல் துறை தங்கள் கடமையை குறைத்து கொள்ளாமல் மக்கள் சேவை செய்தால் இதுபோன்று பாராட்டுகள் குவியும். மீண்டும் காவல் துறையின் அதிகாரம் மரியாதை மற்றும் சட்டத்தின் பால் பயணம் தவறு செய்யும் நபர்களுக்கு உண்டாகும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory