» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாண்டியபதி தேர்மாறன் 217ஆம் ஆண்டு குருபூஜை குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி!
செவ்வாய் 21, ஜனவரி 2025 5:36:58 PM (IST)
தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி தேர்மாறன் 217 ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆங்கிலேய அரசினை எதிர்த்து, கடைசி வரை தீரத்துடன் போரிட்ட, வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களுக்கு, தனது கப்பல்கள் மூலம் ஆயுதங்கள் சென்றடைய உதவிய, சுதந்திர போராட்ட வீரர், மன்னர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் பரத வர்ம பாண்டியன் என்கின்ற பாண்டியபதி தேர்மாறன் 217 ஆம் ஆண்டு குருபூஜை இன்று அன்று தூய பனிமய அன்னை பேராலயத்திற்கு அருகில், பாண்டியபதி தேர்மாறன் நினைவிடத்தில், நடைபெற்றது.
அதன் பின்னர் மாலையில் பெல் ஹோட்டல் உள்ளரங்கத்தில் பாண்டியபதி தேர்மாறன் புகழ் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்மாறன் மீட்புக்குழுவின் சார்பில் ஆரோக்கியராஜ், அந்தோணிசாமி, இன்னாசி, பெல்லார்மின், விஜயகுமார், சீதாதி கிங், ஆரோக்கியசாமி, கனகராஜ், ஆனந்தி, பெசி ஆகியோர் வரவேற்றனர். ஆரம்ப நிகழ்ச்சியாக அருட்தந்தை. ஜேசுதாஸ் அவர்களின் ஜெபத்துடன் தொடங்கி, அதன்பின்னர் அனைத்து பரதகுல ஊர் நலக்கமிட்டிகள், மற்றும் தேர்மாறன் மீட்புக்குழுவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பரத நலச்சங்கத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் பெர்னாண்டோ, மற்றும் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் பிரைட்டர், அண்ணா திமுக மாவட்ட மீனவரணி அகஸ்டின், மீனவ மக்கள் கட்சி தலைவர் கோல்டன் பரதர், தேசிய மீனவர் கட்சி பொதுச்செயலாளர் சேனாதிபதி சின்னத்தம்பி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞர் அணி தலைவர் ஜெரோன் குமார், திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், ஜான் பெர்னாண்டோ, ஜான்சன் தல்மேதா, ஸ்பிக் ராஜ், சங்கரசுப்பு, ராஜசேகர், பிரசாந்த் வாஸ், சுமன் மற்றும் பரதநல ஊர்க்கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.