» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழைநீர் வடிகால் தோண்டும்போது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி!
ஞாயிறு 12, ஜனவரி 2025 1:22:01 PM (IST)
தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் கால்வாய் தோண்டும்போது சுவர் இடிந்து விழுந்து காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை மெயின் பஜார் ரோட்டைச் சேர்ந்தவர் கைலாசம் மகன் பாலகிருஷ்ணன் (28), இவர் கடந்த 8ம் தேதி தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜேஜே நகரில் மழைநீர் வடிகால் கால்வாய் தோண்டும்போது காம்பவுண்ட்சுவர் இடிந்து விழுந்ததில் உள்காயம் அடைந்தார்.
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 9ம் தேதி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை இறந்தார். இது சம்பந்தமாக தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.