» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா: மேயர், ஆணையர் பங்கேற்பு

ஞாயிறு 12, ஜனவரி 2025 11:03:21 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம், பேருராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட வேண்டுமென்று அரசு துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 2 அடுப்புகளில் பானைகள் வைக்கப்பட்டு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் உள்ளிட்ட பொங்கல் வைத்தும், கரும்பு, மஞ்சள், மற்றும் பல வகையான காய்கனி வகைகள் படையலுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் பானையில் அரிசியிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

பின்னர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், மியூசிக்கல் சேர், லக்கி நம்பர், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், முறுக்கு கடித்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், வாயில் டியூஸ்பூன் மூலம் எலும்பிச்சை பழம் வைத்து ஒடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே நடைபெற்றன. சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி நிர்வாக வளர்ச்சிக்கு அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம், அனைவரும் தூய்மையை கடைபிடிப்போம் என்பதை வலியுத்தும் வகையில் பெண்கள் கோலாட்டம் ஆடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். விழாவில் மாநகராட்சி மேயர், ஆணையர், அலுவலக பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலக கட்டிடங்கள் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த மின்னொளிகளால் ஜொலித்தன.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, கனகராஜ், சுரேஷ்குமார், சரவணக்குமார், ஜெபஸ்டின் சுதா, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், சரண்யா, சோமசுந்தரி, மரியகீதா, நாகேஸ்வரி, கண்ணன், பொன்னப்பன், முத்துவேல், பவானி மார்ஷல், மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், ஜாக்குலின்ஜெயா, தனலட்சுமி, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, ஜான், அதிர்ஷ்டமணி, ராமகிருஷ்ணன், ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, பாப்பாத்தி, மகேஸ்வரி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பக கனி, சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் முத்துமாரி, தனலெட்சுமி, மதிமுக கவுன்சிலர் ராமுஅம்மாள்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு ஒருவருக்கொருவர் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா



தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முரளிதரன் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory