» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழன்டா கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு பாடல் : மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார்
ஞாயிறு 12, ஜனவரி 2025 11:13:39 AM (IST)
தூத்துக்குடியில் தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன், எழுதி பாடிய குப்பையின் கேடுகள் குறித்த விழிப்புணர்வு பாடலை மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார்.
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழன்டா கலைக்குழு சார்பாக அதன் தலைவர் ஜெகஜீவன், எழுதி பாடிய குப்பையின் கேடுகள் குறித்து விழிப்புணர்வு பாடல் வெளியிட்டு விழா நடைபெற்றது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பாடலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் அருட் சகோ. பெனடிக்ட், பள்ளியின் தாளாளர் அருட் சகோ ஆரோக்கியம் பீட்டர், தலைமை ஆசிரியர் மரிய ஜோசப் அந்தோணி, சபை உயர் தலைவர் அருட்சகோ அகஸ்டின் ராஜ் அவர்கள், உயிர் மூச்சு திரைப்பட தயாரிப்பாளர் ஜோதிமணி, சீலன் சுருதி சீலன் அவர்கள், சண்முககுமாரி, மற்றும் கலைக்குழுவின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.