» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் பிரச்சனை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 19, நவம்பர் 2024 4:27:51 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜெயிலானி தெரு மற்றும் வி.இ.ரோடு ஆகிய பகுதிகளில் ஒரு சில வீடுகளுக்கு குடிநீர் முறையாக வரவில்லை என்ற மாநகர மக்களின் கோரிக்கையிணையடுத்து அந்த பகுதிகளை பார்வையிட்ட ஆய்வு செய்தேன். அப்பொழுது அந்தப் பகுதிகளுக்கு மாற்று வழியில் குடிநீர் வழங்குமாறு கூறியுள்ளேன் என்றார்.
ஆய்வின்போது, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் பொன்ராஜ், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்..