» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விசைப்படகுகள் ஸ்ட்ரைக் வாபஸ் : நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு!

வியாழன் 30, ஜனவரி 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக நீடித்த விசைப்படகுகள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த கேரள விசைப் படகுகளை சிறை பிடித்தது தொடா்பாக 11 விசைப்படகுகள், அதிலுள்ள மீனவா்கள் மீது மீன்வளத் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை திரும்பப் பெறவேண்டும், ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 27ஆம் தேதி முதல் விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இன்று சமுக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து நாளை முதல் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மொத்தமுள்ள 272 படகுகளில் நாளை 135 படகுகள் கடலுக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. மேலும் காலை 5 மணிக்கு சென்றுவி்ட்டு இரவு 9 மணிக்குள் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மீன் ஏலம் தினமும் காலை 8 மணிக்கு நடைபெறும். சனிக்கிழமை மட்டும் இரவு 8 மணி முதல் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

A.s. ImmanuelJan 31, 2025 - 09:51:49 AM | Posted IP 172.7*****

நல்லதொரு முடிவு தான்.... ஆனாலும் காலை 8மனி என்பது சாத்தியமா..... என்பது வியாபாரிகளின் நிலையை பொறுத்ததே....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory