» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகாத்மா காந்தி நினைவு தினம்: தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கிட மாணவர்கள் உறுதியேற்பு!

வியாழன் 30, ஜனவரி 2025 5:42:55 PM (IST)



எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கிட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று தியாகிகள் தினமாகவும், தேசிய தொழு நோய் ஒழிப்புத் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் காந்திஜியின் மாஸ்க் அணிந்து தொழு நோய் இல்லாத இந்தியாவை உருவாக்கிடவும், அகிம்சை வழியை கடைப்பிடித்திடவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி, பணி நிறைவு பெற்ற ஆசிரியர் முத்துசாமி, பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், பள்ளி ஆசிரியர்கள் அன்புத்தாய், ஜான்ஸி ராணி, ஜோசப்ராஜா ஆசிர், எப்சிபாய் முத்துராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory