» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
திங்கள் 1, ஜூலை 2024 5:17:25 PM (IST)
தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் "சரித்திரம் படை 24" என்ற பெற்றோரை இழந்த மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு எழுது ஏடு மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜாய்சன் தலைமை தாங்கினார்.
புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரஜினி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில் 19 பள்ளிகளைச் சார்ந்த 210 மாணவர்களுக்கு எழுது ஏடு மற்றும் சீருடை வழங்கப்பட்டது.