» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்குபாராட்டு விழா

வெள்ளி 24, ஜனவரி 2025 3:17:25 PM (IST)



மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

விழாவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை ஜேஸ்மின் ஏஞ்சல் குமாரி வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் நடைபெற்ற பரிசு போட்டியில் தூத்துக்குடியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் சுமார் 350 பேர் கலந்து கொண்டு 1 மணி நேரம் கம்பு சுற்றி கின்னஸ் சாதனை படைத்தார் அந்த மாணவர் நாகூர் மீரான் செல்வத்தை  பள்ளியின் தாளாளர் செல்வின் பாராட்டி  சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியில் பள்ளி மாணவர் விஷ்வா தேர்வு பெற்றிருந்தான். அந்த மாணவனையும்  தலைமை ஆசிரியை ஜீவிய ஜெயசீலி பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

17 வயதிற்குட்பட்ட மாணவர் உயரம் தாண்டுதல் பிரிவில் வருவாய் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாதேஷ்க்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழா முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரைற்றன் ஜோயல் நன்றியுரை வழங்கினார். பரிசுகளை பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்  பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory